‘பர்கர்’ வாங்குவதற்காக 4 வயது தங்கையுடன் வேன் ஓட்டிச் சென்ற 8 வயது சிறுவன்
அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் கிழக்கு பாலெஸ்டின் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் வேன் ஓட்டி செல்வதாகவும், அவனுடன் 4 வயது சிறுமி அமர்ந்து செல்வதாகவும் போலீஸ் அதிகாரி ஜேக்கப் கோச்லருக்கு தகவல் கிடைத்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த சிறுவன் வேனை ரெயில்வேயின் ஆள் இல்லாத கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக பத்திரமாக ஓட்டி சென்று அங்குள்ள பிரபல வணிக வளாகத்தை அடைந்தனர்.
அங்கு தனது தங்கையுடன் அமர்ந்து பாலாடை கட்டி பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதற்கிடையே அங்கு சென்ற போலீஸ் அதிகாரி கோச்லர் வேன் ஓட்டி வந்த சிறுவனை கண்டதும் நிம்மதி அடைந்தார்.
ஏன் வேன் ஓட்டி வந்தாய்? என கேட்டார். அதற்கு அவன் எங்களுக்கு பாலாடை கட்டியுடன் கூடிய பர்கர் சாப்பிட ஆசையாக இருந்தது. ஆனால் எனது அம்மா, அப்பா ஆகியோர் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர்.
எனவே நான் வீட்டில் இருந்த எனது தங்கையை அழைத்துக் கொண்டு தந்தையின் வேனை ஓடி வந்தேன் என்றான். வேன் ஓட்ட எப்படி கற்றுக் கொண்டாய் என கேட்டதற்கு யூடியூப் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply