மீதொடமுல்ல குப்பை மேடு சம்பவம் 10 பேர் பலி மேலும் 100 பேர் காணவில்லை
மீதொடமுல்ல குப்பை மேடு நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சரிந்து விழுந்தது தொடர்பில் பல்வேறு வகையில் தகவல்கள் வெளிவருகின்றது. இருப்பினும் பிரதேச மக்கள் தெரிவிக்கும் வகையில் குப்பை மேடு சரிந்து விழுந்த சம்பவம் சம்பந்தமாக சரியான தகவல்கள் வெளியிடவில்லை என குறிப்பிடுகின்றனர். ‘லங்கா நிவுஸ் வெப்’ இணையம் இது தொடர்பில் வினவிய போது.
மீதொடமுல்ல சம்பவத்தின் உண்மையான செய்திகள்:-
கடந்த சில வாரங்களாகவே குப்பை மேடு தீப்பரவல் உட்பட பல மாற்றங்கள் தெரிந்தன. இது தொடர்பில் பிரதேச மக்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தும் அதற்கு எவ்வித கவனமும் செலுத்தவில்லை. நேற்று (14) பிற்பகல் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 75 வீடுகள் சேதமடைந்துள்ளது. இன்று (15) காலை வரை அவ்வீடுகள் 40 அடி குப்பைகளினால் மூழ்கியுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் ஊடாக தகவல்கள் வெளிவந்திருந்தாலும் அது உண்மையில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று (15) காலை மணிவரை 10 உடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன் மேலும் 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நம்புகின்றனர்.
நண்பகல் 1 மணியளிவிலேயே குப்பை மேடு சரிந்து விழ ஆரம்பித்து. இருப்பினும் அதிகாலை 2 மணியளவிலேயே அவற்றை நீக்குவதற்கு பெகோ வந்தது. அதுவரை பிரதேச மக்களும் இராணுவத்தினருமே முடிந்தளவு அனர்தத்தில் சிக்கயவர்களை காப்பாற்றுவதற்கு முனவந்திருந்தனர். எந்தவொரு அதிகாரியும் வரவில்லை. நாங்கள் இந்த குப்பைகளை அகற்றுமாறு எப்பொழுதிருந்து கூறுகின்றோம். புத்தாண்டு தினத்தன்று பிள்ளைகளின் சந்தோஷமும் பரிபோனது. குப்பைக்குள் சிக்கிய வீடுகளில் உள்ளவர்கள் பற்றி இன்னும் தெரியவில்லை. தற்பொழுது 10 உடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. நள்ளிரவு வரை நாம் நம் சொந்தங்களை தேடுவதில் முன்நின்றோம். இரவு என்று நாம் எப்படி விலகி நிற்க முடியும். எம்மால் எப்படி இதனை மறக்க முடியும். 14ம் திகதியும் குப்பை கொண்டு வந்து கொட்டினார்கள்’
உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மூவர் அடங்குவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. காயமடைந்தவர்கள் 7 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தத்திற்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply