சிரியாவின் அலேப்போ நகரில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர், 6-வது ஆண்டாக நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக அதிபர் ஆதரவு படையினர், கடந்த மாதம் மத்தியில் இருந்து அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். போரினால் அங்கிருந்து 80 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர்.
இதனால் அமெரிக்க ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் தாக்குதல் நடத்தியது. கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷியா போரில் குதித்தது. இதனால் சிரியாவில் சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது. 2011-ல் இருந்து நடைபெற்று வரும் சண்டையின் காரணமாக சுமார் 3 லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலேப்போ நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியாகியுள்ளதாக எதிர்ப்பாளர்கள் மீட்பு சேவை மையம் தெரிவித்துள்ளது.
அலெப்போ நகருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களை குறித்து வைத்து ரிமோர்ட் மூலம் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான கார்கள் உணவுப் பொருட்களை கொண்டு சென்றதாக சிரிய ஊடகங்கள் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள ரஷிதீன் என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக இதேபகுதியில் 5ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அலெப்போ நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply