மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள், கொலன்னாவை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.அனர்த்தத்தில் பலியானவர்களின் இறுதிக் கிரியைகளை பூரண அரச அனுசரணையில் மேற்கொள்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அதேவேளை, சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூரண நட்டஈடுகளை வழங்குவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னிருந்த நிலைமைக்கு கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்தார்.
அனர்த்தத்திற்குள்ளான உடைமைகளின் பெறுமதியினை கணக்கிடும் நடவடிக்கைகள் இன்று (17) மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கொலன்னாவை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் வசித்து அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு இருப்பிடங்களை வழங்குவது தொடர்பாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கொழுப்பில் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்று உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply