அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி
அமெரிக்காவின் அதிபராக கடந்த 1989 முதல் 1992-ம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ். இவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்(92) கடுமையான உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள இவரது செயலாளர், லேசான கபவாதம் சார்ந்த தொந்தரவுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இன்றும் உயிருடன் வாழ்ந்துவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் ஒருவர்தான், என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply