50 மணித்தியாலங்களாக தொடர்ந்து முத்தம்! அமெரிக்காவில் கார் வென்ற இலங்கை பெண்
அமெரிக்காவில் 50 மணித்தியாலங்களாக கார் ஒன்றுக்கு முத்தம் கொடுத்து இலங்கை பெண்ணொருவர் பெறுமதியான பரிசொன்றை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஆஸ்டின் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய டிலினி ஜயசுரிய என்ற இலங்கை பெண்ணொருவர் தொடர்ந்து 50 மணித்தியாலங்களுக்கு முத்தம் கொடுத்து கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளார்.
Kia Optima LX என்ற காரினை அவர் பரிசாக வென்றுள்ளார்.
தென்கிழக்கு கியாவின் ரவுன்ட் ரொக் பகுதியில் 96.7 KISS FM என்ற வானொலியினால் நடத்தப்பட்ட “Kiss a Kia” என்ற போட்டியில் பங்குபற்றியதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
இலங்கை பூர்வீகத்தை கொண்ட ஜயசூரிய மாநில சுகாதார ஆய்வகம் ஒன்றில் கடமையாற்றுகின்றார்.
அவரும் அவரது கணவரும் 1998 Toyota Camry என்ற ஒரு காரை பயன்படுத்தி வந்ததாகவும், அந்த கார் பழுதடைந்து விட்டதால் அதனை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக டிலினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கார் ஒன்றினை பரிசாக வென்று தனது கணவருடன் கடற்கரைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இதுவொரு ஆச்சரியமான வெற்றி. பல முறை போட்டியை விட்டு கொடுப்பதற்கு எண்ணினேன். போட்டியின் இடையில் தனது கண்ணில் ஏதோ சென்று விட்டது போன்று உணர்வு ஏற்பட்டது. எனினும் சமாதானப்படுத்திக் கொண்டு போட்டியை தொடர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
போராடி வெற்றி பெற்றமைக்காக 23108 அமெரிக்க டொலர் பெறுமதியான காரை அவர் பரிசாக வென்றுள்ளார்.
இறுதி வரை அவருடன் போராடிய மேலும் 6 பேர் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர்.
இந்த போட்டியில் மொத்தமாக 20 பேர் போட்டியின் இறுதி வரை பங்குப்பற்றியுள்ளனர். எனினும் ஏனைய பலர் தூக்க நிலையை அடைந்தமையினால் போட்டியை விட்டு கொடுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மணித்தியாலமும் 10 நிமிட இடைவேளை வழங்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 150 பேர் போட்டியில் கலந்து கொண்ட போதிலும் 20 பேர் மாத்திரமே இறுதி வரை போராடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply