சவுதி அரேபியாவில் மீட்கப்பட்ட பெண் இன்று நாடு திரும்புகிறார்: சுஷ்மா சுவராஜ்
வீட்டு வேலைகளுக்காக சவுதி அரேபியா செல்லும் பெண்கள் அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் மத்திய அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சவுதி அரேபியாவில் மீட்கப்பட்ட பெண் நாளை தாயகம் திரும்புகிறார் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுஷ்மா கூறுகையில், “இந்தியாவைச் சேர்ந்த சல்மா பேகம் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் விமானம் மூலம் இன்று காலை 4.15 மணியளவில் மும்பை வந்தடைவார். சல்மா பேகத்தை மீட்க 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க ரியாதில் உள்ள இந்திய தூதரகத்தை நான் பாராட்டுகிறேன்” என்றார்.
முன்னதாக தன்னுடைய வீட்டு உரிமையாளரால் உடலாலும், மனதாலும் கடுமையாக இன்னலுக்கு ஆளாவதாக சல்மா பேகம் தன்னுடைய ஏஜெண்டுக்கு தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் சுஷ்மா சுவராஜ் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து ரியாதில் உள்ள இந்திய தூதரகத்தை சுஷ்மா அணுகினார். தற்போது சல்மா மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply