வடகொரியா மீதான ராணுவ தாக்குதல் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல: ரஷ்யா
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையிலும், வடகொரியா தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. வட கொரியாவின் இந்த மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கை தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் பாதுகாப்பு கவுன்சிலிடம், “வடகொரியா உடனான பேச்சுவார்த்தை தீவிரப்படுத்த வேண்டும். பொருளாதார தடைகள் மட்டும் தீர்வல்ல” வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply