அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா?: ஓ.பன்னீர் செல்வம் இன்று முடிவு
அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார்.பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணியினர் நிபந்தனையில்லாமல் பேச்சு நடத்த தயார் என்று அறிவித்தனர். பேச்சு சுமூகமாக நடைபெற டி.டி.வி. தினகரனை கட்சியை விட்டு நீக்கி வைத்தனர். தலைமை கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும், கட்சி, ஆட்சியில் பதவி உள்பட பல்வேறு ரகசிய நிபந்தனைகளும் விதித்துள்ளனர்.
ஆனால் நிபந்தனைகள் தொடர்பாக இரு அணியிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. நிபந்தனைகள் தொடர்பாக இரு அணியினரும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியும் வருகிறார்கள். இதனால் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் மங்கி வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணையக் கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும், தொண்டர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரகசிய கருத்து எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் இணைய கூடாது தனித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
எனவே இது பற்றி முடிவு எடுப்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வீனஸ் காலனியில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது.
இதில் நத்தம் விசுவநாதன், மதுசூதனன், கே.பி.முனுசாமி, பொன்னையன், மைத்ரேயன், செம்மலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்பது குறித்தும் தொண்டர்கள் கருத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாலையில் இறுதிமுடிவு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுகிறார்.
ஆலோசனையில் கலந்து கொண்ட பின் மைத்ரேயன் எம்.பி. கூறுகையில், “அ.தி.மு.க. அம்மா அணியினர் பேச்சு வார்த்தை என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார்கள். நிபந்தனை பற்றி உறுதி அளிக்க மறுக்கிறார்கள்” என்றார்.
பொன்னையன் கூறுகையில், இரு அணிகளும் இணையகூடிய சுமூகமான நிலை உருவாகி உள்ளதாகவும், சுமூகமான நிலையில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply