GSP பிளஸ் கிடைத்தமை அரசாங்கத்திற்கு வெற்றி

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க ஐரோப்பிய சங்கம் இணங்கியமை அரசாங்த்திற்கு கிடைத்த உயரிய வெற்றி என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். எனினும், அந்த வரிச்சலுகையை தடுப்பதற்கு முனைகிறார்கள். அதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என அமைச்சர் குற்றம்சுமத்தினார். வவுனியாவில நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பி.ஹெரிசன் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளமை காரணமாக மேதினக் கூட்டங்களில் அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வௌியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply