யாருமே எம்மை கைவிடவில்லை : சுமந்திரன்
“எல்லோரும் எங்களைக் கைவிட்டு விட்டார்கள் என்கின்ற ஒப்பாரி இப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், உண்மை அதுவல்ல.யாரும் எங்களைக் கைவிடவில்லை. எங்களுக்குச் சாதகமான எத்தனையோ விடயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஐ.நா, பன்னாட்டுச் சமூகம் உட்பட எவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது”இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
முன்னர் நடந்திருக்காத இந்த விடயங்கள் பன்னாட்டு மட்டத்திலே நடந்தேறியிருக்க இங்கே ஒன்றுமே நடக்கவில்லை என்று கூப்பாடு போடுவது சரியல்ல. இத்தகைய முன்னேற்றங்களோடு ஈழத் தமிழர் அரசியல் நகர்வு திருப்பு முனையில் சென்று கொண்டிருக்கின்றது.
உலகம் எங்களைக் கைவிட்டுவிடக் கூடாது. தந்தை செல்வாவின் வழியிலே வந்த சம்பந்தன் தமிழர்களுக்குத் தலைவனாகக் கிடைத்திருப்பது ஒரு பெரும் பாக்கியம் என்றே கருத வேண்டும் – என்றார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply