ஒபாமா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் இத்தாலி பிரதமர் கூறுகிறார்
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் பராக் ஒபாமா குறித்து இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி கருத்து தெரிவிக்கையில், `ஒபாமா அழகானவர், இளமையாக இருக்கிறார். ஆனால், அவரது உடல் நிறம் சூரிய வெளிச்சத்தால் கிடைத்தது’ என்று கூறியிருந்தார்.
பிரதமர், இனவெறியைத் தூண்டும் விதமாக பிரதமர் பேசுகிறார் என்று இதற்கு இத்தாலி நாட்டின் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் பிரசல்ஸ் நகருக்கு வந்திருந்த இத்தாலிய பிரதமரை பேட்டி கண்ட அமெரிக்க பத்திரிகை நிருபர் ஒருவர், நீங்கள் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கலாமே? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பெர்லுஸ்கோனி பதில் கூறுகையில், எதற்காக நான் மன்னிப்பு கேட்கவேண்டும். நீங்கள்தான் இத்தாலியர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோபமாக கூறினார்.
பெர்லுஸ்கோனி தற்போதைய அமெரிக்க அதிபர் புஷ்சின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply