மாலி நாட்டில் 20 தீவிரவாதிகளை சுட்டு கொன்ற பிரான்ஸ் ராணுவம்

ஆப்பிரிக்க நாடான மாலி பிரெஞ்ச் கபிலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு உள் நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். எனவே அவர்களை ஒடுக்கி மாலி நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க 4 ஆயிரம் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

தென் மேற்கு கயோ மகாணத்தில் போல் சரே வனப்பகுதி உள்ளது. அங்கு பதுங்கியிருந்து கொண்டு பிரான்ஸ் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இது புர்கினோ பாசோ நாட்டின் எல்லையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று அங்கு புகுந்து பிரான்ஸ் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் 20 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த டிசம்பர் 12-ந்தேதி புர்கினோபாசோ எல்லைப் பகுதியில் ராணுவம் மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply