2020 இற்கு முன்னர் அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடாத்துவோம் : விமல் வீரவங்ச

நாட்டில் 2020 ஆம் ஆண்டு தேர்தல் வரும் வரை எதிர்பார்த்திருக்க முடியாது எனவும், அதற்கு தாக்குதலை முன்னெடுக்க தயாராக வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.காலிமுகத்திடலில் இன்று நடைபெற்ற மஹிந்த குழுவினரின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.2020 வரை பார்த்திருந்தால், நாடு என்றவொன்று எமக்கு மீதமிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காலிமுகத்திடலில் ஆட்களை கொண்டு வந்து நிரப்புமாறு சவால் விட்டனர். நாம் அந்த சவாலை முறியடித்தோம். அத்துடன், காலிமுகத்திடலைச் சுற்றியுள்ள பாதைகளையும் நாம் நிரப்பினோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply