கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி: தீர்ப்பு இன்று

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்ட கீதா குமாரசிங்க, அரசியல் அமைப்பின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றினால் அறிவிக்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் கே. மலேலகொட மற்றும் நீதிபதி பிரிதி பத்மன் சூரசேன ஆகியோரினால் இந்த மனு விசாரிக்கப்பட்டது.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த கே. புவனக்க, ஜே.கே. அபேவர்தன உள்ளிட்ட நான்கு பேர் கீதா குமாரசிங்கவிற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.

கீதா குமாரசிங்க, குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply