வடகொரியா சோதனை ஏவுகணையை வெடிக்க செய்த ரஷ்யா
வடகொரியாவினால் கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தோல்வியில் முடிவடைந்தது. குறித்த ஏவுகணை ரஷ்யாவை நோக்கி சென்றுள்ளமையினால் ரஷ்யா இந்த ஏவுகணையை வெடிக்க செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த ஏவுகணை வட கொரியாவின் உள்நாட்டு பகுதியில் 30 மைல்களுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருக்கும் போது வெடித்து சிதறியுள்ளது.ரஷ்யாவுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக KN-17 என்ற இந்த ஏவுகணையை ரஷ்யாவினால் வெடிக்க செய்துள்ளதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
குறித்த ஏவுகணை தோல்வியடைந்திருக்காவிட்டால் இது துறைமுகத்தை அல்லது ரஷ்ய பிரதேசத்தை தாக்கியிருக்கும் என்பது தென் கொரியாவின் கருத்தாக உள்ளது.
இந்த காரணத்திற்காக வட கொரியா வேண்டுமென்றே ஏவுகணையை அழித்துள்ளதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் ரஷ்யா கிழக்கு பிராந்தியங்களில் விமான பாதுகாப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு தலைவரான விக்டர் ஓஜெரோவ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான பாதுகாப்பு அதிக எச்சரிக்கையுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய விமானப்படைகள் பொறுப்பேற்ற பகுதிகளில் வான்வெளியை கட்டுப்படுத்துவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஏவுகணை வட கொரியாவின் ஒரு உள்நாட்டு பகுதியில் சுமார் 30 மைல்கள் தூரத்தில் விழுந்துள்ளதென நம்பப்படுகின்றதென ஜப்பான் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply