இரட்டை பிரஜாவுரிமையுடன் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

இரட்டை பிரஜாவுரிமையுடன் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு இலங்கை பிரஜாவுரிமை இல்லையெனக் கூறி அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளது. எனினும், தன்னைவிட ஆளும் கட்சியில் அமைச்சுப் பொறுப்பில் உள்ள சிலரும் இரட்டை பிரஜாவுரிமையுடன் இருப்பதாக கீதாகுமாரசிங்க கூறியுள்ளார். அவர் மாத்திரமன்றி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் இவ்வாறான கருத்தைக் கூறியுள்ளதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

 

கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பதாக அமைச்சர் ஒருவரும் கூறியுள்ளார். அப்படியாயின் அவர்கள் யார்? என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். கீதா குமாரசிங்கவுக்கு ஒரு நீதியும், ஏனையவர்களுக்கு வேறு நீதியும் எவ்வாறு பின்பற்றப்பட முடியும் என்றும் விஜித ஹேரத் எம்பி கேள்வியெழுப்பினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply