வடக்கின் தற்போதைய பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால் நாடு எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்
வடக்கு நிலைமை தெற்கில் இருந்து மிகவும் வேறுபட்டதாகும். போரின் பின் அவசரமாகச் செய்யப்படவேண்டிய பல முக்கியமான சேவைகள் அங்கு செய்யப்படவில்லை.தெற்கில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவை எவையும் புரியாது.அங்கு சென்று பார்த்தால்தான் உண்மை புரியும்.போரின் பின் அதிகமான அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றிருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், எது முதலில்அவசரமாகச் செய்யப்பட வேண்டுமோ அது முதலில் செய்யப்படவில்லை. இதனால்தான் போர் முடிந்து ஏழு வருடங்கள் கழித்தும் வடக்கு நிலைமைபற்றிப் பேசுவதற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
தெற்கை விட வடக்கில் வறுமை அதிகம். 60 வருடங்களுக்கு முன் அங்கு வறுமை எப்படி இருந்ததோ இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது. எந்தவொரு முன்னேற்றமும் அங்கு ஏற்படவில்லை. இதை உடன் தீர்க்க வேண்டும்.
இல்லையென்றால் இந்த நிலைமை நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply