பொன்சேகாவின் படையணிக்கு முழுமையான ஆதரவு
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் படையணி இனவாத, மதவாத சிந்தனையில் போராட்டங்களில் ஈடுபடுவர்களை முடக்கும் பிரிவாகவே அமையும் என்று நவ சமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது.வடக்கு மக்கள் போன்று உண்மையான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வென்று கொள்ளும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குவதற்காக அந்தப் படையணி செயற்படாது என்று தெரிவித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, அந்தப் படையணிக்கு தனது முழுமையான ஆதரவினையும் வெளியிட்டார்.
“வடக்கு மக்களின் போராட்டங்களுக்கு உதவி வழங்குவோம். ஏனென்றால் நாங்களே அந்தப் படையணி. விடயங்களை ஏற்பாடு செய்து நாங்கள்தான் பொன்சேகாவுக்கு கூறுவோம்.
எங்களைப் போன்று போராட்டம் செய்யும் படையணி, இன,மதங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு உதவுமாறு கோரும். வடக்கு மக்களின் உரிமைகளை வழங்க யார் எதிர்ப்பு வெளியிடுகின்றனர்? பொன்சேகா அல்ல. இனவாத, மதவாத பிரிவினரே ஆகும்.
இராணுவத்திற்குள்ளும் இப்படிப்பட்டவர்கள் உள்ளனர். பொன்சேகாவை கொலைசெய்து வெளியேற்றுவதற்கு திட்டமிட்டவர்கள் இராணுவத்தில் உள்ளனர். அவர்களே இன்றும் இன,மதவாத சிந்தனையில் உள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் உண்மையிலேயே அவர்களது கோரிக்கைக்காகவா தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்? இல்லை. அதேபோல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட மருத்துவத் துறையினரது போராட்டமும் உண்மையான கோரிக்கைகளுக்காக இருக்காது.
அவர்கள் இந்த அரசாங்கம் எமது கோரிக்கைக்கு தீர்வு வழங்காவிட்டால் அரசாங்கம் கவிழும்வரை நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சூளுரைக்கின்றனர். எனவே அவர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்துவது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அல்ல, மாறாக அரசியல் நோக்கங்களுக்காகவே ஆகும்” – என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply