24 மணிநேரத்திற்குள் பிரபாகரன் உட்பட எஞ்சியுள்ள விடுதலைப்புலிகள் சரணடையாது விட்டால் அனைவரும் அழிக்கப்படுவர் : கெஹெலிய
24 மணிநேரத்திற்குள் பிரபாகரன் உள்ளிட்ட எஞ்சியுள்ள விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் சரணடையாது போனால், அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவர் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 24 மணிநேரத்திற்குள் சரணடையுமாறு விடுதலைப்புலிகளுக்கு நேற்று இறுதியான உத்தரவுவிடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நேற்று மதியம் 12 மணி முதல் இன்று மதியம் 12 மணி வரை புலிகள் சரணடைவதற்கான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் சரணடையாது போனால் போர் நடவடிக்கை மூலம் அவர்கள் அழிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply