தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.வவுனியா, மன்னார் வீதி குருமன்காட்டில் அமைந்துள்ள சிறீரெலோ கட்சியின் காரியாலயத்தில் இன்று (05) மாலை 5.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந்த நிகழ்வானது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (telo) மூத்த உறுப்பினரும் படுகொலை செய்யப்பட்ட சபாரத்தினத்தின் மெய்ப்பாதுகாவலருமான அஜித் தலமையில் நடைபெற்றுள்ளது.
அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகள் மற்றும் போராளிகளான சூரி, அல்பிரட், சாப் ஆகியோருடன் சிறீரெலோ இளைஞர் ஒன்றிய தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அஜித், படுகொலை செய்யப்பட்ட சபாரத்தினம் அவர்களின் வரலாறு பற்றியும் அவரது சிறப்புகள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
இதேவேளை, இன்று மாலை 5.30மணியளவில் சபாரத்தினம் அவர்கள் சுட்டு கொல்லப்பட்ட இடமாக கருதபடும் இடத்திலும், யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன் தலைமையில் நினைவு கூறப்பட்டுள்ளது.
மேலும், அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னால் போராளிகள், மூத்த உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply