பாதுகாப்பு செயலாளர் பதவி கபில வைத்தியரத்னவிற்கு
எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்பொழுது பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றும் கருணாசேன ஹெட்டியாரச்சி ஜேர்மன் தூதுவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹெட்டிhரச்சியின் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு தற்பொழுது கிங்ஸ்லி பெர்ணான்டோ, ஹேமஸ்ரீ பெர்ணான்டோ மற்றுமு கபில வைத்தியரத்ன ஆகிய மூவரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஹேமஸ்ரீ பெர்ணான்டோ தற்போதைய மத்திய வங்கியின் தலைவர் என்பதுடன் ஜனாதிபதியின் முதலாவது தேர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இருப்பினும் மத்தி வங்கியின் தலைவர் என்ற காரணத்தினால் அவர் மிகவும் பணிமிகுதியில் இருக்கின்றதனால் அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கபில வைத்தியரத்ன தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேவையாற்றுவதுடன் அவர் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஆவார். அதற்கமைய அவர் தற்போதைய சட்டமா அதிபர் திணைக்களத்தில் நீதிவானிற்கும் மற்றும் சொலிசிட்டர் ஜெனராலிற்கு மட்டும் இரண்டாவதாக உள்ளார். இவர் அடுத்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவு புதிய பாதுகாப்பு செயலாளராக அவர் நியமிக்கப்படுவார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply