மேல்மாகாண முதலமைச்சருக்கு சவால் விடுக்கும் சம்பிக்க
பல்வேறு இடங்களில் தனக்கு சேறு பூசும் விதத்தில் கூறுவதை நிறுத்தி விட்டு தன்னுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு வருமாறு மெகா பொலிஸ் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவிற்கு சவால் விடுத்துள்ளார்.
மீதொடமுல்லை குப்பை மேடு சரிந்து விழுவதற்கு உண்மையிலேயே மெகா பொலிஸ் அமைச்சு மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரே பொறுப்பு கூற வேண்டும் என்பதுடன் முதலமைச்சரின் வேலைத்திட்டங்களுக்கு இடமளிப்பதில்லை எனவும் தெரிவிக்கும் மேல்மாகாண முதலமைச்சர், கடந்த நாட்களில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.
குப்பை மேடு சரிந்து விழுந்ததற்கு எனது அமைச்சுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சம்பக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குப்பை மேடு தொடர்பில் நிர்வகித்தது கொழும்பு நகரசபை எனவும் அது தொடர்பில் தலையிட்டது நகரசபை ஆணையாளர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆகவே தான் குறிக்க முதலமைச்சரின் வேலைத்திட்டம் என்ன, குப்பை மேடை நிர்வகித்தது யார், குப்பை மேட்டை பயன்படுத்தி கப்பம் பெற்றது யார் என்பது பற்றி நேரடி விவாதத்திற்கு வருகை தந்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேரியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply