சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் :வீ.ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அறிக்கைகள் விட இடமளிக்க வேண்டாமென, இது இராஜதந்திர அணுகுமுறைக்கு பாதமாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், சம்பந்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘இலங்கையின் செயற்பாடுகள், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் எமது அப்பாவி மக்களே கடுமையாகப் பாதிக்கப்படுவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு, கூட்டமைப்பின்எமது நாட்டு மக்களுக்கு உதவ முன்வருகின்றவர்களை, பல தரப்பட்ட அறிக்கைகளை விடுத்து, அவர்களின் மன உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply