‘மோடி’ வருகையில் வீதிகள் திறக்கப்படாது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்து பயணிக்கும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில், பிரதான வீதிகள் சிலவும், அதனோடு இணைந்த குறுக்கு வீதிகளும் முழுமையாக மூடப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அவ்வீதிகளில் ஒரு பக்கத்திலேனும் வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படாது.  இதேவேளை, எதிர்வரும் 11ஆம் திகதி, மாலை 6.15க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்து, களனிபாலம் நுழைவாயிலில் வெளியேறி, பேஸ்லைன் வீதியூடாக கங்காராம சீமாமாலயக்கவை வந்தடைவார்.  

 

அன்றையதினம், மாலை 5.45 மணிமுதல், கட்டுநாயக்க அதிவேகநெடுஞ்சாலையில்,கட்டுநாயக்கவிலிருந்து கொழும்புக்கு பயணிப்பதற்கான ஒழுங்கை மட்டும் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.    இந்த நேரத்தில், பேலியகொடை பக்கத்திலிருந்து கட்டுநாயக்க பக்கமாக பயணிக்கும் வாகனங்கள், அதிவேக நெடுஞ்சாலைக்குள் எந்தவொரு நுழைவாயிலிலும் நுழைய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.    இதேவேளை, ஹட்டனிலிருந்து நோர்வூட் வரையான வீதி மற்றும் அதனோடு இணைந்த, குறுக்கு வீதிகள் யாவும்,  எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 12 மணிக்கு பின்னர் முழுமையாக மூடிவிடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply