மீனவர் பிரச்சினை குறித்து மோடி பேச வேண்டும் : ஜி.கே.வாசன்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேச வேண்டும் என்று முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,
கொழும்பில் நடைபெறும் வெசாக் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (11) வியாழக்கிழமை இலங்கை செல்ல இருக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உடன்பாடுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமர், இலங்கை பிரதமரை நேரில் சந்திக்கும்போது இந்திய மீனவர்கள் குறித்து குறிப்பாக தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து முக்கியப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
ஏற்கனவே இந்திய- இலங்கை மீனவப் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் பல கட்டப் பேச்சுவார்த்தை இந்தியாவிலும், இலங்கையிலும் நடை பெற்றிருந்தாலும் இன்னும் சுமூகத்தீர்வு எட்டப்படாமல் தமிழக மீனவர் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகிறது.
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த உரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கையின் வசம் உள்ள தமிழக மீனவர்களின் 136 படகுகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply