இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என பழ நெடுமாறன் வலியுறுத்தல்
இலங்கை சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லவிருக்கும் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கும் சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என பழ நெடுமாறான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு இந்த விஜயத்தில் பிரதமர் மோடி தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும் எனவும் பழ நெடுமாறான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply