அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்துதான் பதவி பெற்றேன் என்பது என்னை அவமதிப்பதற்கு :புதிய துணைவேந்தர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என்று யாழ். ஆயர் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று நிராகரித்திருக்கிறார் புதிய துணைவேந்தர். ஆயரின் கருத்தைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜாவுக்கு துணைவேந்தர் பதவியை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சில நாள்களின் முன்னர் பொது நிகழ்வு ஒன்றில் பேசிய யாழ். ஆயர் மேதகு ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்துக் காரசாரமாக விமர்சித்தார்.
‘‘பல்கலைக்கழகப் பேரவையால் முதலாவது நபராகத் தெரிவு செய்யப்பட்டவர் இருக்கத்தக்கதாக, அரசியல்வாதிகளின் கால்களில் போய் வீழ்ந்தவர் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இப்படி நியமனம் பெற்றவரை மாணவர்கள் மதிப்பார்களா? விரிவுரையாளர்கள் மதிப்பார்களா? கல்வியின் நிலை எங்கே போகிறது’’என்று காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார் ஆயர்.
பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக இருந்த யாழ்ப்பாண ஆயருக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு முறைகள் தொடர்பில் விளக்கம் இல்லையா?முன்னைய காலங்களில் மூன்றாமிடத்தில் இருந்தவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்படும்போது அவர் அமைதியாக இருந்தது ஏன்?
ஒரு மதத்தின் குரு முதல்வராக இருந்து கொண்டு தரவுகளை ஆராயாமல் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மரியாதைக்குரியதல்ல. தனக்கு ஏற்ற வகையில் அவர் கருத்துக்களை முன்வைப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் -என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply