இலங்கை பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் (புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்) கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப்பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இலங்கை சென்றார். இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயுடன் கொழும்பு நகரில் உள்ள 120 ஆண்டு பழமையான கங்கராமய்யா கோவிலின் அங்கமாக திகழ்கிற சீமா மாலகா புத்த கோவிலுக்கு சென்று சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் பாரம்பரிய வழக்கப்படி, மோடி அந்த புத்த கோவிலின் கருவறைக்குள் சென்றார். அங்கு அவர் விளக்கு ஏற்றி வழிபட்டார்.

 

அதனை தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வாழும் கண்டியில் நுவரெலியாவில் பிரதமர் மோடி பங்கேற்று இந்தியா பங்களிப்பில் கட்டப்பட்ட மருத்துவ மனையை துவக்கி வைத்தார். இலங்கை தலைநகரான கொழும்பு- வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

 

இந்நிலையில் இரண்டு நாள் இலங்கை பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply