காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கிலோ ஹெரோயின் மீட்பு
காங்கேசன்துறை கடற்படை தளத்திலிருந்து சுமார் 08 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் சுமார் 9.3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர்லெப்டின்னட் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான கரையோர பாதுகாப்பு பிரிவினரின் படகொன்றில் சென்ற படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்து வந்த பொதி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
அதனை கடற்படைத் தளத்துக்குகொண்டு வந்து காங்கேசன்துறை பொலிஸாரின் உதவியுடன் சோதனையிட்டபோது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் சுமார் 9 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கொழும்புக்கு எடுத்து செல்வதற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடற்படையினரைக் கண்டதும் கடலில் வீசிவிட்டு தப்பிசென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply