பிரான்சின் மிக இளம் அதிபராக பதவியேற்றார் இமானுவல் மக்ரான்
பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார்.
இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது.
இதில் மக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார். மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்று கொண்டார். மக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மெரீன், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்திருந்தார்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், மக்ரான் அதிபராக பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழா அரங்கிற்கு வந்த மக்ரான் மற்றும் அவரது மனைவிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக அதிபராக பதவியேற்கும் முன்னதாக முன்னாள் அதிபர் ஹோலண்டேவை சந்தித்த மக்ரான், அனு ஆயுதங்கள் சம்பந்தமான குறியீடுகளை பெற்றுக் கொண்டார். மேலும், பதவியேற்றவுடன் முதல் அயல்நாட்டு பயணமாக இந்த வாரம் மக்ரான் ஜெர்மனி சென்று அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மார்கெல்லை சந்தித்து பேச இருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply