பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்

பனை உற்பத்திகளில் ஒன்றாகிய பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்காட்டி வருவதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த உற்பத்திப்பொருளாகவும் வெல்லம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், புலம்பெயர்வாழ் மக்கள் ஒடர்கள் மூலம் அதிகளவில் வெல்லங்களை கொள்வனவு செய்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

முன்னைய காலங்களில் உள்ளுர் மக்கள் பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் கூடிய நாட்டம் காட்டுவதில்லை என்றும், தற்போது அவர்களும் வெல்லங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் எமது பிரதான அலுவலகத்திற்கு நேரில் விஜயம் செய்து வெல்லங்களை கொள்வனவு செய்வதாகவும் கூறினார்.

இந்த வருடம் 30 ஆயிரம் வெல்லங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது ஒரு கிலோ வெல்லம் 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வெல்லங்களை கொள்வனவு செய்ய விரும்புவோர் ஏ 9 வீதி, கரடிப்போக்குச் சந்தி, கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திலோ அல்லது முல்லைத்தீவு வீதி, கண்டாவளைச் சந்தியில் அமைந்துள்ள வெல்ல உற்பத்தி நிலையத்திலோ கொள்வனவு செய்ய முடியும்.

அத்துடன், புலம்பெயர்வாழ் மக்கள் 021 4924 218 என்ற எமது தலைமைக் காரியாலய தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 021 4924 221 என்ற வெல்ல உற்பத்தி நிலையத்தின் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதற்கான ஓடர்களை மேற்கொள்ள முடியும் என்றும், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கம் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply