பிரமுகர்கள் சென்ற புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ள தயாராக இருந்தவர்கள் கைது
கண்டி – கடுகண்ணாவைக்கு இடையில் புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்த நான்கு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டிலான வெசாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கண்டியில் இருந்து கொழும்பிற்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்த புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவற்காக இவர்கள் காத்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணம் செய்த புகையிரதம் மீதும் இந்த குழுவினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இதன்போது புகையிரத பாதுகாவலர்கள் பயணம் செய்த பெட்டியின் கண்ணாடிகள் கடுமையாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து முக்கிய பிரமுகர்களின் புகையிரதம் மீது இவர்கள் தாக்குதல் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே பொலிசார் விரைந்து செயற்பட்டு குறித்த இளைஞர் குழுவினரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேரும், கண்டிப் பிரதேசத்தில் உள்ள உறவினர் வீடுகளுக்குச் சென்றிருந்த அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேரும் உள்ளடங்கியுள்ளதுடன், இவர்கள் 19-20 வயதுப் பருவத்தை உடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை இன்று கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply