ரான்சம்வேர் இணைய தாக்குதலால் ஆசிய நாடுகளில் மிகப்பெரும் பாதிப்பு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ என்ற ஒரு வகை வைரஸ் தாக்கியது. இ-மெயில்கள் மூலம் நடந்த இந்த சைபர் தாக்குதலால் கம்ப்யூட்டர்கள் முடங்கின. இது உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது. அதன்படி சீனாவின் மிகப்பெரிய எரிசக்தி வினியோக நிறுவனமான ‘பெட்ரோசீனா’, தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பெட்ரோல் நிறுவனங்களின் நிதி கட்டமைப்பு முடங்கியதாக அறிவித்துள்ளது. நாட்டின் போலீஸ், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் இந்த தாக்குதலால் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானின் ஹிட்டாச்சி தொழிற்சாலை, சில மருத்துவமனைகள் இந்த சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல இந்தோனேஷியாவின் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனையில் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தென்கொரியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் இணையதளம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இவ்வாறு இந்த சைபர் தாக்குதல் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. உலகளாவிய இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் சர்வதேச வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply