அவுஸ்ரேலிய பாதுகாப்பு உயரதிகாரிகள் இலங்கையில் முக்கிய பேச்சு

அவுஸ்ரேலியாவின் கூட்டு முகவர் அதிரடிப்படையின் தளபதியான எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று நடந்த இந்தச் சந்திப்பில், சிறிலங்கா குழுவில் பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், கடற்படை நடவடிக்கை பணிப்பாளர், றியர் அட்மிரல் பியல் டி சில்வா, கடலோரக் காவல்படையின் தளபதி றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி, பிரிகேடியர் ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவுஸ்ரேலிய குழுவில், எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போனுடன், கடல்சார் எல்லை கட்டளைப் பீடத்தின்பிரதி தளபதி ஜோ குறூக்ஸ், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்சிசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, மனித கடத்தல் உள்ளிட்ட நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக இரண்டு நாடுகளும் இணைந்து செயற்படுவதை உள்ளடக்கிய இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply