அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச தயார்: நிக்கி ஹாலே

அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் நேற்று கூடிய ஐ.நா.சபை கூட்டத்திலும் வட்கொரியாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 

வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தும் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

 

இந்நிலையில், நேற்று நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும் போது, அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்துவதை வடகொரியா நிறுத்தினால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார். மேலும் வடகொரியா மீதான புதிய பொருளாதாரத் தடைகளை நீக்க ஐ.நா. பரிசீலிக்கும் என்றும் ஹாலே தெரிவித்தார்.

 

மேற்கண்ட தகவல்களை வடகொரியா பின்பற்றினால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

 

மேலும் வாஷிங்டன் – பீஜிங் ராணுவ நட்பு மற்றும் தூதரக இணைப்பு மூலம் வடகொரியாவின் மீது புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் ஹாலே தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply