கம்மன்பிலவுக்கு ‘பைத்தியம்’ : மனோ கணேசன்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான உதய கம்மன்பிலவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவருக்கு வைத்தியம் பார்ப்பதற்கு இந்தியாவிலிருந்து வைத்தியர்களை அழைக்கவேண்டும் என்றும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.   சிங்கள மக்களைத் தூண்டிவிடும் முகமான, இனவாத பைத்தியமே பிடித்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

 

தனியார்த் தொலைக்காட்சியில் நேற்று (16) இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   அந்த விவாதத்தில் பேசிய விடயங்கள் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    “பிரதமர் மோடி, மலையகம் சென்று, தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இன்னும் ஏழு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் அறிவித்துள்ளார்.

 

இவை பற்றிய பின்னணிகளை அறியாமல், புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல், இத்தகைய அறிவிப்புகளை செய்ய நரேந்திர மோடி யார்? இலங்கை இந்தியாவின் 30வது மாநிலமா? என்ற கேள்விகளை உதய கம்மன்பில எழுப்பியுள்ளார்.   “நீரெல்லாம் திருந்தவே மாட்டீரா” என நான் அவரை கேட்க விரும்புகிறேன். “உமக்கு மூளையில் சுகமில்லை. உமது பைத்தியத்தை சுகப்படுத்த, இந்தியா தந்துள்ள இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகனத்தில் ஏற்றி, இந்திய வைத்தியர் ஒருவரிடம் அழைத்து செல்ல நான் தயார்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply