மனித இறைச்சி பரிமாறியதாக புகார்: லண்டனில் இந்திய ஓட்டலை இழுத்து மூட வைத்த பேஸ்புக் செய்தி
தென்கிழக்கு லண்டனில் ஷின்ரா பேகம் என்பவர் ‘கறிடுவிஸ்ட்’ என்ற பெயரில் இந்திய உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகம், தன்னுடைய உணவில் மனித இறைச்சியை சேர்ப்பதாக போலியான செய்தி வெளியானது. குறும்புத்தனமான செய்திகளை பதிவு செய்யும் இணையதளத்தில் வெளியான இந்த செய்தி, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டு வைரலாக பரவியது.
அந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் இதனை உண்மை என நம்பி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளனர். சிலர் மிரட்டவும் செய்துள்ளனர். வாடிக்கையாளர்கள் வருகை முற்றிலும் குறைந்து வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஓட்டலை மூட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மனித இறைச்சி குறித்து வெளியான தகவல் தவறானது என தெரியவந்தது.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஷின்ரா பேகம் கூறுகையில், “எங்கள் ஓட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக, தப்பும் தவறுமாக ஒரே ஒரு பத்தியில் வெளியான இந்த செய்தியை உண்மை என நம்பிவிட்டனர். ஒரு நபர் ஓட்டலுக்கு போன் செய்து ஓட்டலைத் திறந்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என்று மிரட்டினார். காவல்துறைக்கும் ஒருவர் புகார் அளித்தார்.
என்ன தைரியம் இருந்தால் மனித இறைச்சியை எங்களுக்கு கொடுப்பீர்கள்? என சிலர் எச்சரித்தனர். 60 வருடங்களாக எந்த பிரச்சனையும் இன்றி இந்த ஓட்டலை நடத்தி வருகிறோம். யாரோ ஒருவர் இப்படி எழுதிய செய்தி, ஓட்டலின் பெயரை கெடுத்துவிட்டது. வியாபாரமும் பாதித்துவிட்டது” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply