தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மற்றும் பல புலி உறுப்பினர்கள் சரண்

புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், புலிகள் அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளருமான தயா மாஸ்ரர் மற்றும் புலிகளின் அரசிற் துறை பொறுப்பாளாராக மறைந்த சுப. தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் ஆகியோர் படையினரிடம் சரணடைந்துள்ளனர். புதுமாத்தளன் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களுடன் மக்களாக வெளியேறி வரும் புலிகளின் உறுப்பினர்களுடன் இவர்கள் இருவரும் இன்று நண்பகலுக்கு சற்று முன்னர் சரணடைந்துள்ளதாக படையினர் தெரிவித்தனர்.

இதில் ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் என்பவர் தமிழ்ச்செல்வன், பிரபாகரன் ஆகியோரின் மிகமுக்கிய சந்திப்புகளுக்கு மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டவர் என்பதுடன் கடந்த கால சமாதான பேச்சுவார்த்தைக் குழுவில் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவரிடம் இருந்து புலிகளின் பல முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என இராணுவத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

15-07-2006இல் தயா மாஸ்ரர் கொழும்பில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய சிகிச்சைக்கு தற்போதய அரசு அனுமதி வழங்கியிருந்மை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply