அமைச்சரவை மாற்றம் : 9 அமைச்சுபதவி, ஒரு இராஜாங்க அமைச்சுப்பதவி
புதிய அமைச்சரவை மாற்றத்தின் படி 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் ஒரு இராஜாங்க அமைச்சுப்பதவிகளும் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.அதன் படி நிதியமைச்சராக இருந்த ரவி கருநாணயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சுப்பதவியும் வெளிவிவகார அமைச்சராகவிருந்த மங்கள சமரவீரவுக்கு ஊடக மற்றும் நிதி அமைச்சுப்பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த அர்ஜுண ரணதுங்கவுக்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சுப்பதவியும் மீன்பிடி அமைச்சராகவிருந்த மஹிந்த அமரவீரவுக்கு ஏற்கனவே இருந்த மீன்பிடி அமைச்சு மற்றும் புதிதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுப்பதவியும் வழங்கப்பட்டுள்ளதுடன் மஹிந்த சமரசிங்கவுக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்திமவீரக்கொடி திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகவும் ஊடக அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்க காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராகவும் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு சமூக மேம்பாடு,நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராகவும் டபிள்யூ.ரி.ஜே. செனவிரத்ன தொழிலாளர் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராகவும் திலக் மாரப்பன அபிவிருத்திப் பணிகள் அமைச்சராகவும் பெறுப்பேற்றுக்கொண்டனர்.
புதிய அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply