புலிகளை 14 சதுரக் கி.மீ பெட்டி வடிவில் ஒடுக்கியுள்ள இராணுவம் மீட்புப் பணியை தொடர்கிறது.

இலங்கை இராணுவத்தின் 53வது மற்றும் 58வது டிவிசன் படையினர் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் தொடர்வதாக படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள் வெள்ளாம் முல்லி வாய்கால் பகுதியில் மிஞ்சியுள்ள மக்களை துப்பாக்கி முனையில் சிறு பகுதிக்குள் முடக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஆளில்லா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படக்காட்சிகளில் மூலம் காணக்கூடியதாக இருக்கிறது.

இராணுவத்தின் 55வது டிவிசன் மற்றும் 58வது டிவிசன் படையினரும் இணைந்து தற்பொழுது புலிகளை 14 சதுரக் கி.மீ. பெட்டி வடிவப் பகுதிக்குள் முடக்கியுள்ளனர்.

கடந்த திங்கள் (ஏப். 20) காலை முதல் 58வது டிவிசன் படையினர் 31,017 சிறுவர்கள், 27,990 பெண்கள், 24,422 ஆண்கள் உட்பட 83,429 சிவிலியன்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை, புலிகளின் தடைநிலைகளை தாக்கிக் கொண்டு முன்னேறிவரும் படையினர் அம்பலவாணன் பொக்கணை பகுதியிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற மற்றுமொரு பாதுகாப்பான தரைவழிப் பாதையை திறந்துள்ளனர்.

இத்தாக்குதல்களை நடத்திய படையினர் அப்பிரதேசத்தில் இறந்த 5 புலிகளின் உடல்கள், 23 ரி-56 ரக துப்பாக்கிகள், 24 கைக்குண்டுகள், இரு தொடர்பு சாதனங்கள் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் 3 கெப் வண்டிகள், ஒரு சொகுசு ஜீப், இரு மினி றக், ஒரு மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் மேலும் கைபற்றியுள்ளனர். புலிகள் இவ்வாகனங்களை விட்டுச் செல்லும் போது பல வாகனங்கள் மீது தாக்கித் தகர்த்து விட்டுச் சென்றுள்ளதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply