யுத்த சூனிய பிரதேச மக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை புலிகள் பறித்து அவற்றை மக்களுக்கு அதிகவிலைக்கு விற்றுள்ளனர்.
படையினரின் மனிதாபிமான மீட்டுப் பணி தீர்மானகரமான ஒரு கட்டத்தை நெருங்கிய போது மக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் கடந்த ஜனவரி ஆரம்பத்தில் ‘யுத்த சூனிய பிரதேசம்’ என சில பகுதிகளை அறிவித்தது. அப்பகுதிக்குள் வந்த பொது மக்களின் வாழ்வாதாரத்துக்கான நிவாரணப் பொருட்களையும் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது. அவ்வாறு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை முழுமையாகப் புலிகள் பறித்து எடுத்து அவற்றை மக்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும் அவைகள் தங்களால் வாங்கக்கூடிய விலைக்கு அப்பாற் பட்டதாகவும் இருந்ததாக அங்கிருந்து தப்பி வந்த மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான ஒரு சாட்சியத்தை அல்-ஜசீரா தொலைகாட்சியினரும் பதிவு செய்துள்ளனர். கீழுள்ள செய்திக் காட்சித் தொகுப்பை பார்க்க.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply