தற்போதைய நிலையில் யுத்த நிறுத்தமொன்றைக் கோருவது புலிகளைப் பலப்படுத்த மட்டுமே உதவும் : ஐ. நா. பாதுகாப்புச்சபை

புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பினர் அவர்கள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக்கேடயங்கலாக பயன்படுத்தி வருவது கண்டிக்கப்பட வேண்டும். புலிகள் அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு உடனடியாக ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என ஐ நா பாதுகாப்புச் சபை உறுப்பினர்களது கருத்துக்களைத் தொகுத்து வழங்கும் போது ஐ. நா. பாதுகாப்புச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விஷேட தூதுவராக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த விஜய் நம்பியார் அவர்களால் இலங்கை தொடர்பான விபரங்கள் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்பாவிப் பொது மக்களை புலிகள் பணயமாக வைத்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை பாதுகாப்புச் சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டிருப்பதோடு பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் வெளியேறி வந்திருப்பதையும் பாராட்டியுள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து வெளியேறி வரும் பெரும் எண்ணிக்கையான பொது மக்களின் நிலமைகளை சமாளிக்கும் வகையில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய வேண்டு மென்றும் பாதுகாப்புச்சபை கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் யுத்த நிறுத்தமொன்றைக் கோருவது புலிகளைப் பலப்படுத்த மட்டுமே உதவும் என்பதோடு பொது மக்கள் பாதிப்பை எந்தவகையிலும் தடுத்து நிறுத்தாது என்றவகையில் பாதுகாப்புச் சபை யுத்தநிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சினையை விரைவாக முடிப்பதற்கான ஒரேவழி புலிகள் ஆயுதங்களைக் கீழேவைத்து சரணடைந்து அரசியல் நடைமுறையொன்றுக்கு வழிவிடுவதேயாகும் என்றும் பாதுகாப்புச்சபை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply