புலிகளிடமிருந்து தப்பி வருவோர் நிலை பாதுகாப்பு கவுன்ஸிலில் ஆராய்வு; உச்ச அளவில் வசதிகளை வழங்க ஜனாதிபதி பணிப்பு

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு உச்ச அளவிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாரென சுகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பாக பாதுகாப்பு கவுன்ஸில் நேற்று கூடி ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார். வன்னியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பதற்காக 300 க்கும் அதிகமான மருத்துவர்களும் 550க்கும் அதிகமான தாதிமார்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று  மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.

வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சகல வசதிகளும் அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் குறித்து நான் பாதுகாப்பு கவுன்ஸிலில் விளக்கமளித்தேன்.300 டாக்டர்களுக்கு மேலதிகமாக வதிவிட மருத்துவர்கள் 200 பேரும் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் அங்கு அனுப்பப்படுவர்.

நோய்வாய்ப்பட்டு வரும் மக்களில் மேலதிக சிகிச்சை தேவையானவர்களை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென வேறு ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் கட்டில்களை ஒதுக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரண்டு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஒரு நடமாடும் ஆஸ்பத்திரி வழங்க முன்வந்துள்ளது.

தப்பி வரும் மக்களுக்கு உதவ நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளை பெற்று அந்த மக்களுக்கு உதவ அரசு ஆவன செய்து வருகிறது.

போக்குவரத்து வசதி

வன்னியில் இருந்து வரும் மக்களை அழைத்து வருவதற்கென 150 க்கும் அதிகமான பஸ்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் பஸ்கள் தேவைப்படுமானால் மேலதிக பஸ்கள் அங்கு அனுப்பப்படுமெனவும் அமைச்சர் கூறினார். ஏற்கனவே 50 க்கும் அதிகமான பஸ்கள் வவுனியாவுக்கு அனுப்பப்பட் டுள்ளன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply