ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றில் ஆஜராகவில்லை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை. மேற்படி வழக்கில் கடந்த 31ஆம் திகதியும் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை, இதனால் ஞானசார தேரரை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டார்.
அடுத்த தவணைக்கு கட்டாயம் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவ்வாறு ஆஜராகாவிடின் கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இன்றும் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என ஞானசார தேரர் தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இதன்போது, ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை எனவும், அடுத்த தவணைக்கு கட்டாயம் தேரர் நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 18,19,20 ஆம் திகதிகளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply