அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடன் பதவி விலகவேண்டும்
நாவலப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தீவிபத்து ஏற்பட்டமை குறித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில்போலிக்கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்களிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு உடன் அமைச்சுப் பதவியைத் துறக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுப் பகல் அவ்வமைப்பின்தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த வித்தானகே இவ்வாறுவலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழில்சாலையொன்றில் தீவிபத்து ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அடிப்படைவாதிகள்இருக்கின்றனர் எனக் கூறும் யுகம் உருவாகியுள்ளது.
நாவலப்பிட்டிய சம்பவம்குறித்து அமைச்சர் ஹக்கீம் இப்படியான கருத்தையே வெளியிட்டிருந்தார். அமைச்சர்இவ்வாறு கூறிய பின்னர் இதன் பின்னணியில் பொதுபலசேனாதான் இருக்கின்றது எனஅப்பாவி முஸ்லிம் மக்கள் நினைப்பார்கள்.
எனவே, போலி தகவல்களை வெளியிட்டுகுழப்பத்தை உருவாக்குவதற்கு பொறுப்புள்ள அமைச்சுப் பதவியை வகிப்பவர்பொறுப்பற்ற விதத்தில் செயற்படக்கூடாது.எனவே, தவறுக்கு மன்னிப்புக் கோரி அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply