ஐரோப்பிய யூனியனில் நீடித்திருக்க இங்கிலாந்துக்கு கதவுகள் திறந்தே இருக்கும்: இம்மானுவேல் மாக்ரோன்

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் நீடித்து இருப்பதற்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று அண்மையில் பிரான்சு அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். பிரக்ஸிட் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் துவங்கப்படும் என்று தெரசாமே தெரிவித்துள்ள நிலையில் மேற்கண்டவாறு இம்மானுவேல் மாக்ரேன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது இம்மானுவேல் மாக்ரோன் இந்த தகவலை தெரிவித்தார். இது குறித்து மாக்ரோன் கூறுகையில், “ பிரக்ஸிட் பேச்சுவார்த்தை முடிய எவ்வளவு காலம் நீடிக்குமோ அதன் வரை இங்கிலாந்துக்கான கதவுகள் திறந்தே இருக்கும்” என்றார். மேலும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற இங்கிலாந்து மக்களின் இறையாண்மை முடிவை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து தெரசே மே இது தொடர்பான பேச்சுவார்த்தையில் அங்குள்ள கட்சிகளுடனும் ஈடுபட்டு வரும் நிலையில், பிரக்ஸிட் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி அடுத்த வாரம் துவங்கும் என்று அறிவித்து உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply