ஜெயலலிதா மரணத்தில் எந்தவிதமான சதித்திட்டமோ, சந்தேகமோ இல்லை. டி.டி.வி.தினகரன்
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் கட்சியை வழிநடத்த வேண்டும். ஜெயலலிதாவின் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்று எங்கள் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் விரும்புகிறார்கள். சிலர் அதற்கு எதிராக இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்களும் விரைவில் திரும்பி வருவார்கள்.
சில அமைச்சர்கள் எனக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவாலோ அல்லது எங்களது குடும்பத்தினராலோ அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
ஜெயலலிதா மரணத்தில் எந்தவிதமான சதித்திட்டமோ, சந்தேகமோ இல்லை. ஒரு பெரிய தலைவரின் மரணத்தை அரசியல் ஆக்க கூடாது. அவர் சிகிச்சை பெற்ற போது, அவரை மற்றவர்கள் சந்தித்தால் கிருமி தொற்று ஏற்படும் என்பதற்குதான் டாக்டர்கள் அவர்களை சந்திக்க அனு மதிக்கவில்லை.
அவர் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட படத்தை ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்பதால் வெளியிடவில்லை. அப் போது எடுக்கப்பட்ட படம் என்னிடம் உள்ளது. அவற்றை சசிகலா என் னிடம் கொடுத்தார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் போது, அந்த படங்கள் எனக்கு கிடைத்தன. மருத்துவமனையில் பலவீன மாக அவர் இருப்பது மிகவும் வேதனையாக இருந்தது. எனவே, அந்த படத்தை எந்த சூழ்நிலையிலும் வெளியிட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply