ஊடக சுதந்திரத்தினால் பாதிக்கப்பட்டும் மைத்திரி – ரணில்
ஊடக சுதந்திரத்தை நாட்டில் உறுதி செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊடக சுதந்திரத்தினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களே ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மிகவும் அதிகம் தாக்கப்படுவதாக ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.சுயாதீன தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு 38 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு, புதிய காரியாலயமொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் நேற்று பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட இலங்கையின் ஊடகத்துறைக்கு, ஜனாதிபதியும் பிரதமருமே விடிவினை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் ஓர் பயனாக தற்பொழுது பிரதமரும் ஜனாதிபதியும் ஊடகங்களினால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகின்றனர்.
எனினும் ஊடகங்களுக்கு தடைகளையோ அல்லது அடக்குமுறைகளையோ பிரயோகிக்கப் போவதில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்பு சொல்லக்கூடிய சுதந்திர ஊடகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் சுயாதீன தொலைக்காட்சி உண்மையில் பெயரளவில் சுயாதீனமான ஊடகமாக காணப்பட்டது.
ஒரு குடும்பத்தின் தேவைக்காக அவர்களின் அரசியல் நோக்கத்திற்காக செய்திகள் தயாரிக்கப்பட்டதுடன், ஏனையோர் மீது சுயாதீன தொலைக்காட்சி சேறு பூசல்களில் ஈடுபட்டு வந்தது.
அரசாங்கத்தின் பயணத்திற்கு சுயாதீன தொலைக்காட்சியின் ஒத்துழைப்பு அவசியமானது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply