ஆளுநர் ரெஜினோல்ட் அவசரமாக கொழும்பு வருகை
வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் பதவி தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்களிடையே எழுந்திருக்கும் பெரும் சர்ச்சையையடுத்து வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று அவசரமாக விமானம் மூலம் கொழும்பு வந்தடைந்தார். மாகாணசபை உறுப்பினர்களால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் இருவேறு தீர்மானங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சட்ட ஆலோசனைகளை பெறும் நோக்கிலேயே அவர் நேற்று அவசரமாக கொழும்பு வந்ததாக தெரியவருகிறது.
வடமாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வார இறுதி நாட்களில் ஆளுநர் கொழும்பிலுள்ள அரச தரப்பு அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையன்று உத்தியோகப்பூர்வ நடவடிக்கை எடுப்பாரென்றும் ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டுமென 22 பேர் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை ஆளுநரிடம் கையளித்துள்ளனர். இதனையடுத்து ஆளுநர், வடமாகாணசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவாஜிலிங்கம் தலைமையிலான 15 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் முதலமைச்சருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் நம்பிக்கைத் தீர்மானமொன்றை கையளித்துள்ள நிலையிலேயே அவை தொடர்பில் சட்ட ஆலோசனைப் பெறுவதற்காக ஆளுநர் நேற்று அவசரமாக கொழும்பு வந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply